ADDED : ஜூலை 16, 2024 07:19 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
சங்கராபுரம் ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவமனை, சங்கராபுரம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் டி.எம்.பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, ரோட்டரி தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் சங்கர் வரவேற்றார். செயின்ட் ஜோசப் பள்ளி தாளாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். துணை ஆளுனர் ராமலிங்கம் முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில், கோவை சங்கரா கண் மருத்துவ மையத்தைச் சேர்ந்த கண் டாக்டர்கள் 330 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 145 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு கோயம்புத்துார் அழைத்துச் செல்லப்பட்டனர்.
முகாமில் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சாராள் ஜோசப் சீனிவாசன், ரோட்டரி முன்னாள் தலைவர்கள், இன்னர் வீல் கிளப் தலைவர் சுபாஷினி ரமேஷ், செயலாளர் மஞ்சுளா, பொருளாளர் உஷாதேவி, உட்பட பலர் பங்கேற்றனர்.
பொருளாளர் ரவி நன்றி கூறினார்.