/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தெருக்கூத்து கலைஞரை சுட்டு கொல்ல முயற்சி கல்வராயன்மலையில் விவசாயி கைது

ADDED : மே 13, 2024 04:48 AM
கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் முன்விரோதம் காரணமாக, தெருகூத்து கலைஞரை, நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, கள்ளிப்பாறை மேற்கு மலைக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன், 43; தெருக்கூத்து கலைஞர். அதே ஊரை் சேர்ந்தவர் பச்சையப்பன் மகன் அன்பழகன், 36; விவசாயி. இருவருக்குமிடையே ஊரில் பஞ்சாயத்து பேசுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி இரவு 7:00 மணியளவில் சுந்தர்ராஜன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அன்பழகன் தனது வீட்டில் வைத்திருந்த அனுமதியில்லாத நாட்டு துாப்பாக்கியை எடுத்து வந்து, சுந்தர்ராஜனை சுட்டு கொலை செய்ய முயன்றார்.
துப்பாக்கி குண்டு குறி தவறி, அருகில் இருந்த சுவற்றில் பட்டு தெரித்துள்ளது. இது குறித்து சுந்தர்ராஜன் கொடுத்த புகாரின் பேரில் கரியாலுார் போலீசார் வழக்கு பதிந்து, அன்பழகனை கைது செய்து, அனுமதியின்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.