/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெட்ரோல் பங்க் உரிமம் வழங்குவதாக விவசாயியிடம் ரூ.14 லட்சம் மோசடி
/
பெட்ரோல் பங்க் உரிமம் வழங்குவதாக விவசாயியிடம் ரூ.14 லட்சம் மோசடி
பெட்ரோல் பங்க் உரிமம் வழங்குவதாக விவசாயியிடம் ரூ.14 லட்சம் மோசடி
பெட்ரோல் பங்க் உரிமம் வழங்குவதாக விவசாயியிடம் ரூ.14 லட்சம் மோசடி
ADDED : பிப் 27, 2025 09:15 AM
கள்ளக்குறிச்சி; பெட்ரோல் பங்க் வைத்து தருவதாக ஆன்லைனில், விவசாயியிடம் ரூ.14 லட்சம் அபகரித்த மர்ம நபர்களை, சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையை சேர்ந்தவர் பாண்டியன், 51; விவசாயி. இவர் கடந்த ஜனவரியில் பெட்ரோல் 'பங்க்' வைக்க, விதிமுறைகள் குறித்து ஆன்லைனில் தேடினார்.
அப்போது கிடைத்த ஒரு படிவத்தில் தனது விவரங்களை குறிப்பிட்டு, ஆன்லைனில் சமர்ப்பித்தார். உடன் அவரை, மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், மும்பை, பாரத் பெட்ரோலியத்தில் இருந்து பேசுவதாக கூறி, பாண்டியன் குறித்த விவரங்களை கேட்டு, 'டாக்குமெண்ட்' கட்டணமாக, ரூ. 6 ஆயிரம் அனுப்ப கூறினார். இதை நம்பி, அவரும் பணத்தை அனுப்பினார்.
அதன்பிறகு மர்ம நபர், பெட்ரோல் பங்க் உபகரணங்கள், போக்குவரத்து செலவு என பல்வேறு காரணங்களை கூறி, பணம் கேட்டார். இதைத்தொடர்ந்து,  பாண்டியனும், 4 தவணைகளாக, 14 லட்சத்து 4 ஆயிரத்து 300 ரூபாயை மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் அனுப்பினார்.
இந்நிலையில், பெட்ரோல் பங்க் லைசென்ஸ் வாங்க, ரூ.5.35 லட்சம் மீண்டும் அனுப்ப மர்ம நபர் கூறியதும் சந்தேகமடைந்த பாண்டியன், அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று விவரங்களை கேட்டார். அப்போது அவரை மர்ம நபர் ஏமாற்றியது தெரிந்தது.
இதுகுறித்து, பாண்டியன் அளித்த புகாரை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

