/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தாழ்வாக செல்லும் மின்கம்பி விவசாயிகள் அச்சம்
/
தாழ்வாக செல்லும் மின்கம்பி விவசாயிகள் அச்சம்
ADDED : ஆக 02, 2024 02:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: வட பொன்பரப்பி கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால் விவசாயிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த வட பொன்பரப்பி சப் ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு முன், மின் கம்பிகள் எட்டித் தொடும் அளவிற்கு மிக தாழ்வாக செல்கின்றன. இதனால், அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் பலமுறை வடப்பொன்பரப்பி துணை மின் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, தாழ்வாக செல்லும் மின்கம்பியை சீரமைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.