/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மானிய விலையில் விவசாயிகள் பசுந்தாள் உர விதை பெறலாம் வேளாண் துறை அறிவிப்பு
/
மானிய விலையில் விவசாயிகள் பசுந்தாள் உர விதை பெறலாம் வேளாண் துறை அறிவிப்பு
மானிய விலையில் விவசாயிகள் பசுந்தாள் உர விதை பெறலாம் வேளாண் துறை அறிவிப்பு
மானிய விலையில் விவசாயிகள் பசுந்தாள் உர விதை பெறலாம் வேளாண் துறை அறிவிப்பு
ADDED : ஜூன் 26, 2024 11:30 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மண்ணின் வளத்தை அதிகரிக்க செய்யும் பசுந்தாள் உர விதைகளை மானிய விலையில் பெற்று பயன்பெற விவசாயிகளுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழகத்தில் அதிக அளவில் ரசாயன உரங்கள், களைகொல்லிகள், பூச்சிகொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைகிறது.
இதனால் மண்ணின் வளம் குறைவதுடன், மண்ணின் உற்பத்தி திறனும் குறைகிறது.
மண்ணின் வளத்தை காத்து, மக்களின் நலத்தினை காத்திடும் பொருட்டு நெல் சாகுபடி செய்யும் வயல்களில் மண்வளத்தை மேம்படுத்திடும் வகையில் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 6,000 ஏக்கர் பரப்பளவிற்கு 50 சதவித மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட வேளாண் துறை சார்பில் இலக்கு பெறப்பட்டுள்ளது.
பசுந்தாள் உர விதைகள் மண்ணின் உயிர்ம கரிமச்சத்தினை அதிகரித்து, அதன் மூலம் பயிர் மகசூலை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயனடைய தகுதி உடையவர் ஆவர்.
பசுந்தாள் உர பயிர் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு இம்மாவட்டத்தின் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஏக்கருக்கு 20 கிலோ வீதம் பசுந்தாள் உர விதைகள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தினையோ அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அணுகி பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது.