/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ெஷட்டர் பராமரிப்பு பணியை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை: மணிமுக்தா அணை தண்ணீர் வெளியேறுவது தடுக்கப்படுமா?
/
ெஷட்டர் பராமரிப்பு பணியை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை: மணிமுக்தா அணை தண்ணீர் வெளியேறுவது தடுக்கப்படுமா?
ெஷட்டர் பராமரிப்பு பணியை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை: மணிமுக்தா அணை தண்ணீர் வெளியேறுவது தடுக்கப்படுமா?
ெஷட்டர் பராமரிப்பு பணியை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை: மணிமுக்தா அணை தண்ணீர் வெளியேறுவது தடுக்கப்படுமா?
ADDED : ஆக 13, 2024 06:45 AM

கள்ளக்குறிச்சி: சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில், பழைய ெஷட்டர்களில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், அணைக்கு வரும் மழை நீர் ஆறு வழியாக வெளியேறுகிறது. விரைவாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக உள்ளது. மாவட்டத்தில் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை, சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை உள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை 796.96 மில்லியன் கனஅடி கொள்ளளவு (36 அடி) கொண்டது. கல்வராயன்மலை சுற்று வட்டாரத்தில் பெய்யும் மழைநீர் மணி மற்றும் முக்தா ஆறுகள் வழியாக அணைக்கு வந்து தேங்குகிறது. இதுதவிர மூரார்பாளையம் பாப்பாங்கால் ஓடையில் இருந்தும் அணைக்கு தண்ணீர் வருகிறது.
ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு பாசன கால்வாய் வழியாக திறக்கப்படுவது வழக்கம். அதன் மூலம் 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 5,496 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இது தவிர அணையில் இருந்து தண்டலை, பெருவங்கூர், பல்லகச்சேரி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதுடன், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. இதற்கிடையே அணையில் உள்ள தடுப்பணைகளில் இருந்து சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்படுகிறது.
பருவ மழையின் போது அணையின் மொத்த கொள்ளளவு உயரும் பட்சத்தில், பாதுகாப்பு கருதி ெஷட்டர்கள் திறந்து ஆறு வழியாக தண்ணீர் வெளியேற்றுப்படும். இதற்காக 3 பழைய ெஷட்டர்கள், 4 புதிய ெஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் மழைக் காலங்களில் பழைய ெஷட்டரில் அவ்வப்போது பழுது ஏற்பட்டு தண்ணீர் கசிந்து ஆற்றில் வெளியேறுகிறது. இதனால், பழைய ெஷட்டர்களை உபயோகிப்பதில்லை. புதிய ெஷட்டர் வழியாக மட்டுமே தற்போது தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதற்கிடையே, வடக்கிழக்கு பருவ மழைக்கு முன்பாக அணையின் ெஷட்டர்களில் நீர்வளத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கமாகும். அதன்படி, தற்போது பழைய ெஷட்டர்களில் தண்ணீர் கசிந்து வெளியேறுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த சில நாட்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதில் 3 ெஷட்டர்களிலும் படிந்திருக்கும் கரிசல் மண்களை அகற்றுதல், ெஷட்டர்களை ஏற்றி, இறக்குவதற்கு வசதியாக ரோப்களில் கிரீஸ் பூசுதல் உட்பட பல்வேறு பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில் அணை பகுதியில் பெய்யும் மழை நீர் பழைய ெஷட்டர்கள் பகுதிக்கு தண்ணீர் வருகிறது. அணையின் 3 ெஷட்டர்களும் உயர்த்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடப்பதால், அங்கு வரும் மழை நீர் ஆறு வழியாக வெளியேறி வருகிறது. இதனால், தண்ணீர் வீணாக செல்வதைத் தடுக்க அணையின் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.