ADDED : பிப் 26, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வரும் 28 ம் தேதி விவசாயிகள் குறைக் கேட்புக் கூட்டம் நடக்கிறது.
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வரும் 28ம் தேதி காலை 11:00 மணி முதல் 2:00 மணி வரை நடக்கும் கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்குகிறார்.
கூட்டத்தில் வேளாண்துறை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வணிகம் மற்றும் பொறியியல், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

