/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் நாளை விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
/
கள்ளக்குறிச்சியில் நாளை விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
கள்ளக்குறிச்சியில் நாளை விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
கள்ளக்குறிச்சியில் நாளை விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
ADDED : ஆக 29, 2024 08:14 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் 2024ம் ஆண்டிற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 30ம் தேதி 11:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடக்கிறது.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல், கால்நடைபராமரிப்பு, கூட்டுறவு, வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, வங்கியாளர்கள் மற்றும் பிறசார்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாகவும், தனிநபர் தங்கள் குறைகள் குறித்தும் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.