/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாயிகள் நில உடைமை பதிவுகள் முகாம்
/
விவசாயிகள் நில உடைமை பதிவுகள் முகாம்
ADDED : மார் 07, 2025 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, உழவர்சந்தையில் பிரதமரின் பிரதான திட்டத்தின் படி விவசாயிகளின் பட்டா, சிட்டா, ஆதார், மொபைல் எண் ஆகியவைகளை இணைத்து அடையாள எண் வழங்கும், நில உடைமை பதிவுகள் சரி பார்த்தல் முகாம் நடந்தது.
மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி முகாமை துவக்கி வைத்தார். துணை வேளாண் அலுவலர் இசைச்செல்வன், உதவி வேளாண் அலுவலர்கள் இளவரசன், பாலமுருகன், நுகர்வோர் சங்க செயலாளர் அருண் கென்னடி ஆகியோர் பங்கேற்றனர். இதில், 100,க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.