ADDED : ஜூன் 19, 2026 07:01 PM

ரிஷிவந்தியம்: இளையனார்குப்பம் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
வாணாபுரம் அடுத்த இளையனார்குப்பத்தில் அட்மா திட்டம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் ஷியாம்சுந்தர் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் வினோத், தீபிகா, பிரியதர்ஷினி, துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், தோட்டக்கலை அலுவலர் ஷோபனா, உதவி வேளாண்மை அலுவலர் சதீஷ்மன்னன், உதவி தோட்டக்கலை அலுவலர் முரளி ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் மாடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, மண் வளம் பாதுகாப்பு, நெல், மக்காச்சோளம், மரவள்ளி பயிர்களில் உர பரிந்துறை, தொழில்நுட்ப பயிற்சி, விவசாய அடையாள அட்டை பதிவு செய்தல், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைதுறை சார்ந்த திட்டங்கள், பயோ என்சைம் தயாரித்தல், சொட்டு நீர் பாசனத்தின் முக்கியத்துவம், இயற்கை விவசாயத்தின் பயன்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சுகனேஷ்வர், மேரி ஆனந்தி, பயீர் காப்பீடு பணியாளர்கள் சையத்சமீர், கனகா ஆகியோர் செய்திருந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி நன்றி கூறினார்.
