/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏரி வண்டல் மண் எடுக்க அனுமதி கேட்டு நடையாய் நடக்கும் விவசாயிகள்
/
ஏரி வண்டல் மண் எடுக்க அனுமதி கேட்டு நடையாய் நடக்கும் விவசாயிகள்
ஏரி வண்டல் மண் எடுக்க அனுமதி கேட்டு நடையாய் நடக்கும் விவசாயிகள்
ஏரி வண்டல் மண் எடுக்க அனுமதி கேட்டு நடையாய் நடக்கும் விவசாயிகள்
ADDED : ஆக 02, 2024 02:22 AM

உளுந்துார்பேட்டை,: உளுந்துார்பேட்டை பகுதியில் தற்போது விவசாய பயன்பாட்டிற்காக ஏரி வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக இணையதளம் வழியாக பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பலர் மண் கொள்ளையர்களால் ஏரி வண்டல் மண் கொள்ளை அடிக்கப்படுகிறது.
ஆனால் சாதாரண விவசாயிகள் தங்களது விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுக்க இணைய தளத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
இணையதளத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் இல்லை என கூறி விவசாயிகள் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். தினசரி தாலுகா அலுவலகத்திற்கு மண் எடுப்பதற்கு அனுமதி கேட்டு விவசாயிகள் நடையாய் நடந்து வருகின்றனர்.
விவசாய பயன்பாட்டிற்கு மண் அடித்து கொள்ளலாம் என கூறி விட்டு விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டு வரும் சம்பவம் விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.