/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மகளிடம் அத்துமீறல் கொடூர தந்தை கைது
/
மகளிடம் அத்துமீறல் கொடூர தந்தை கைது
ADDED : ஆக 26, 2024 09:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில் : கட்டுமன்னார்கோவில் அருகே கிராமத்தைச் சேர்ந்தவர் 38 வயதுடைய நபர். இவருக்கு திருமணமாகி 11 வயதில் மகள் உள்ளார். நேற்று முன்தினம் இரவு, போதையில் வீட்டிற்கு வந்த நபர், மனைவியிடம் தகராறு செய்து வீட்டை விட்டு துரத்தியுள்ளார். அப்போது வீட்டில் தனியாக துாங்கிய மகளிடம் அந்த நபர் போதையில் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார்.
சேத்தியாதோப்பு மகளிர் போலீசில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, மகளிடம் அத்துமீறிய நபரை, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.