ADDED : ஆக 01, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
சங்கராபுரம் அடுத்த ராமராஜாபுரத்தைச் சேர்ந்தவர் சாதிக்பாஷா. இவரது 17 வயது மகள் நேற்று முன் தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சாதிக்பாஷா அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.