ADDED : ஜூலை 22, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே தந்தையை காணவில்லை என போலீசில், மகன் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த க.மாமனந்தலைச் சேர்ந்தவர் வீரப்பன். இவரது தாய் கடந்த 10ம் தேதி இறந்தார்.
தந்தை பெரியசாமி, 73; சோகத்துடன் இருந்த நிலையில், கடந்த 17ம் தேதி, மகன் வீரப்பனிடம், சங்கராபுரம் அடுத்த தேவபாண்டத்திற்கு உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.