ADDED : ஜூலை 08, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் சேர்ந்த கோம்பையன் மனைவி சசிகலா, 35; இவர்களுக்கு, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். கடந்த 3ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற சசிகலா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
