/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம்; திருக்கோவிலுார் வட்டத்தில் கலெக்டர் ஆய்வு
/
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம்; திருக்கோவிலுார் வட்டத்தில் கலெக்டர் ஆய்வு
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம்; திருக்கோவிலுார் வட்டத்தில் கலெக்டர் ஆய்வு
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம்; திருக்கோவிலுார் வட்டத்தில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 22, 2024 11:58 PM

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலுார் வட்டத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின்கீழ் கலெக்டர் பிரசாந்த் கள ஆய்வு மேற்கொண்டார்.
திருக்கோவிலுார் நகராட்சி அலுவலகத்தில் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், முடிவுற்ற பணிகள், புதிய திட்டப் பணிகள் தொடங்கவுள்ள விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருக்கோவிலுார் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் நிதியின்கீழ் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் நடந்துவரும் துார்வாரும் பணிகள், சுற்றுச்சுவர் கட்டுதல், ஏரியிலிருந்து குளத்திற்கு தண்ணீர் வருவதற்கான வாய்க்கால் பராமரிப்பு உள்ளிட்ட குளம் சீரமைப்புப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
தெப்பக்குளத்திற்கு வரும் வரத்து வாய்க்கால்களில் மழைநீர் தடையின்றி குளத்திற்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்க ஆலோசனைகள் வழங்கினார்.
நகராட்சி குப்பைக் கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகள் தரம் பிரிப்பது, குப்பையிலிருந்து உரம் தயாரிப்பது, தயாரிக்கப்பட்ட உரத்தினை விற்பனை செய்வது, திடக்கழிவு மேலாண்மைத் திட்ட செயல்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
முன்னதாக, திருக்கோவிலுார் வட்டம் எல்ராம்பட்டு அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி, திருக்கோவிலுார் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி, மாணவியர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் ஏற்படுத்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் தரைத் தளத்தில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு, பிரசவம், கண் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பிரிவுகளை ஆய்வு செய்து,
ஆய்வின்போது, மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், திருக்கோவிலுார் நகராட்சி ஆணையர் (பொ) மகேஷ்வரி, பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், தாசில்தார் மாரியாப்பிள்ளை, பி.டி.ஓ., கொளஞ்சிவேல் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.