ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
ADDED : ஜூலை 10, 2026 06:14 PM
கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் டாக்டர் குமார் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் கல்லுாரி இணை இயக்குநர் மதிவாணன், ஹார்ட் புல்னஸ் கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஹரிகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினர். கல்லுாரி டீன்கள் சக்திவேல், லோரா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களை அறிமுகம் செய்தனர்.
மாணவர்கள் கற்றலின் அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும், கல்வியுடன் ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையும் வளர்க்க வேண்டும், திறமையாக படித்து கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துறைத்தலைவர்கள் சக்திபிருந்தா, நர்கீஸ்பேகம், அங்குராஜ், சங்கீதா, சக்திவேல், தங்கவேல், அனந்தராமன், ராஜா, பொறுப்பாசிரியர்கள் அருமீனா, மேகலை, கவுசல்யா, பவுலின் சங்கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்லுாரி துணை முதல்வர் அசோக் நன்றி கூறினார்.
