தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கொள்ளையடிக்க திட்டம் ஐந்து பேர் கைது

கொள்ளையடிக்க திட்டம் ஐந்து பேர் கைது

கொள்ளையடிக்க திட்டம் ஐந்து பேர் கைது


ADDED : ஏப் 09, 2024 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2024 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரிஷிவந்தியம்: மையனுார் அருகே கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாணாபுரம் அடுத்த மையனுாரைச் சேர்ந்தவர் அந்தோணி சூசைராஜ், 46; இவர் பைக்கில், மையனுாருக்கு சென்றார். அவரைத் தொடர்ந்து உறவினர்கள் வந்ததால், அவர்களுக்காக சிங்காரதோப்பு பிரிவுசாலையோரம் காத்திருந்தார்.

அப்போது, அங்கு காரில் வந்த 5 பேர், அந்தோணி சூசைராஜை மிரட்டி, தாக்க முயன்றனர். அதற்குள் அந்தோணி சூசைராஜ் உறவினர்கள் வந்ததும் 5 பேரும் காரில் தப்ப முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்து பகண்டைகூட்ரோடு போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அகரகோட்டாலம் பழனிசாமி மகன் அஜித்குமார், 23; கூவாகம் கோபால் மகன் ஆனந்தராஜ், 29; குப்பன் மகன் திருமலை, 21; செல்வராஜ் மகன் ஜெயபிரதாப், 23; கூத்தான் மகன் அய்யப்பன், 21; என்பதும், அப்பகுதியில் கொள்ளையடிக்க திட்டமிட்டதும் தெரிந்தது. இதனையடுத்து 5 பேரையும் பகண்டைகூட்ரோடு போலீசார் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us