/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குண்டர் சட்டத்தில் ஐந்து பேர் கைது
/
குண்டர் சட்டத்தில் ஐந்து பேர் கைது
ADDED : ஜூலை 04, 2024 03:27 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மதுவிலக்கு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், விரியூர் கிராமத்தை சேர்ந்தவர் அகஸ்டியன் மகன் இருதயராஜ், 39; இவர், கடந்த மே மாதம் 19ம் தேதி சாராயம் விற்றபோது சங்கராபுரம் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், தகரை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் பழனிசாமி, 35; இவர், கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி சாராயம் விற்றபோது சின்னசேலம் போலீசார் கைது செய்தனர். இருவரிடமிருந்து 285 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், கடந்த மே மாதம் 30ம் தேதி புதுச்சேரியில் போலியாக மதுபானம் தயாரித்து, அதில் தமிழ்நாடு அரசு முத்திரையிட்டு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்த அண்ணாதுரை, 46; சக்திவேல், 42; குமார் (எ) சொட்டை குமார்,55; ஆகிய 3 பேரை உளுந்துார்பேட்டை மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 4,700 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 5 பேர் மீது, கள்ளச்சாராயம் கடத்தியது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே, அவர்களின் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ரஜத் சதுர்வேதி பரிந்துரையின் பேரில் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார்.
இதையடுத்து கடலுார் மத்திய சிறையில் உள்ள 5 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.