
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; சங்கராபுரம் அடுத்த மஞ்சபுத்துார் கிராமத்தில் காங்., சார்பில், சீரமைப்பு கூட்டம் மற்றும் கொடியேற்றம் நடந்தது.
மாவட்ட துணை தலைவர் இதயதுல்லா தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் பிரபு, செல்வராஜ், அப்துல்கலாம்,துரைராஜ், கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் ராம சுகந்தன், மாவட்ட தலைவர் ஜெய் கணேஷ் கொடியேற்றி வைத்தனர். பின், கமிட்டி நிர்வாகிகள் பரமசிவம்,தாஸ்மோகன்,திருமலை,அமாவாசை,கார்மேகம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளை முன்னாள் மாவட்ட தலைவர் இளையராஜா, தேவராஜ், வீரமுத்து, இளவரசன், தனபால், ராஜ்மோகன்,சுகுமாறன்,விஜய்,முரளி,அப்பாஸ்,ஜெகதீசன் பாராட்டினர். வட்டார தலைவர் நவாஸ்கான் நன்றி கூறினார்.

