ADDED : ஜூன் 22, 2026 04:42 PM
அ நிறம் | அளவு
கச்சிராயபாளையம்: பெரியார் நீர் வீழ்ச்சியில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கல்வராயன்மலையில் கோடை மழை காரணமாக அவ்வப்போது பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நேற்று கல்வராயன்மலையில் பெய்த கனமழை காரணமாக பெரியார் நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீர்வீழ்ச்சியில் செம்மண் கலந்த தண்ணீர் அதிக அளவில் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
