/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தி.மு.க., நிர்வாகி வீட்டில் பறக்கும் படை சோதனை
/
தி.மு.க., நிர்வாகி வீட்டில் பறக்கும் படை சோதனை
ADDED : ஏப் 16, 2024 06:28 AM
உளுந்துார்பேட்டை : திருநாவலுார் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் ஒன்றியம், கிளாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். தி.மு.க., ஒன்றிய செயலாளர். இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று மதியம் 3:00 மணியளவில் அவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். 20 நிமிடங்கள் நடந்த சோதனையில் எந்தவித பணமும் சிக்கவில்லை.
இதனால் பறக்கும்படை அதிகாரிகள் ஏமாற்றுத்துடன் திரும்பினர். இச்சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

