ADDED : மார் 02, 2025 04:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி:' வாணியந்தல் கிராமத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கட்சி கொடியேற்றி, அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கி, கட்சி கொடியேற்றி, இனிப்பு வழங்கி 2000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிங்காரவேல், ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன், துணை தலைவர் மணிவண்ணன், கிளை செயலாளர் கண்ணன், நிர்வாகிகள் மாயவன், ஏழுமலை, ராஜவேல், வேலு, செல்லாயி, சின்னதுரை, குப்பன், முத்துக்கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.