
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: பகண்டைகூட்ரோட்டில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தி.மு.க., சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஒன்றிய செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். தொகுதி மேற்பார்வையாளர் பெருநர்கிள்ளி தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலம் சென்றனர்.
தொடர்ந்து, உறுதிமொழி ஏற்கப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ராஜா, கனகராஜ், ஜோதிநாதன், சண்முகம், செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.