/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச முழு மாதிரி தேர்வு
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச முழு மாதிரி தேர்வு
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச முழு மாதிரி தேர்வு
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச முழு மாதிரி தேர்வு
ADDED : ஆக 02, 2024 02:17 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, 2-ஏ தேர்வுக்கு இலவச முழு மாதிரித் தேர்வுகள் நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 2, 2-ஏ தேர்வுக்கா காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு வரும் செப்டம்பர் 14ம் தேதி தேர்வு நடக்கிறது.
இப்போட்டி தேர்வுக்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த போட்டி தேர்வர்கள் பயனடையும் வகையில் இலவச 13 முழு மாதிரித் தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரித் தேர்வுகளும் நடத்திட திட்டமிடப்பட் டுள்ளது.
இந்த மாதிரித் தேர்வுகள் வரும் 6ம் தேதி காலை 10:00 மணி முதல் வார நாட்களில் தொடர்ந்து கள்ளக்குறிச்சி, அரசு மருத்துவமனை அருகில் உள்ள டேனிஷ் மிஷன் நகர துவக்கப்பள்ளியில் நடக்கிறது.
தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கள்ளக்குறிச்சி, 18/63 நேப்பால் தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது https://forms.gle/rmkHZNju3BuBxk 3A9 மூலமாக தங்களின் விவரத்தினை வரும் 5 தேதிக்குள் பதிவுசெய்து கொள்ளலாம்.