/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கைதிகளுக்கு இலவச சட்ட உதவி முகாம்
/
கைதிகளுக்கு இலவச சட்ட உதவி முகாம்
ADDED : மார் 04, 2025 07:23 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கிளைச் சிறையில் கைதிகளுக்கு இலவச சட்ட உதவி முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி வட்ட சட்ட பணிக்குழு சார்பில் சிறை கைதிகளுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி கிளைச் சிறையில் கைதிகளுக்கு இலவச சட்ட உதவி முகாம் நடந்தது.
சிறை கண்காணிப்பாளர் தமிழ்முத்து தலைமை தாங்கினார். வட்ட சட்ட பணிக்குழு வழக்கறிஞர் வேலாயுதம் கைதிகளுக்கு, சட்ட பணிகள் குழுவின் மூலம் சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் உதவி மற்றும் பாதுகாப்பு, மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திருத்தப்பட்ட 3 குற்றவியல் சட்டங்கள், தண்டனை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கிளைச் சிறை தலைமைக் காவலர்கள் சுதாகர், கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.