ADDED : ஜூன் 05, 2026 05:31 PM

அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா பாட புத்தகங்களை அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ., வழங்கினார். கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கலாபன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்ராயலு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் காயத்ரி முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர் அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள், சீருடைகள் மற்றும் குறிப்பேடுகளை வழங்கி, மாணவர்கள் நன்கு படித்து பொது தேர்வில் சாதனை படைக்க வேண்டும் என வாழ்த்தினார்.உதவி தலைமை ஆசிரியர்கள் கோவிந்தசாமி, அசோகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.
