ADDED : ஜூலை 22, 2026 06:51 PM
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாய் இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபரத்தை சேர்ந்தவர் ராசேந்திரன் மகன் காந்தகுமார் 40. இவருக்கும் இவரது தங்கை தீபாவிற்கும் சொத்து சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்தது. சொத்தை பிரித்து தராததால் ஆத்திரமடைந்த காந்தகுமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த 18ம் தேதி இரவு தீபாவை கத்தியால் குத்தி கொன்றார்.
இது சம்பந்தமாக சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, காந்தகுமார், ரமேஸ்குமார், மணிகண்டன், சரத்குமார் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இவ் வழக்கில் தலைமறைவாய் இருந்த சங்கராபுரம் அப்துல் நபி மகன் ேஷக் அகமது, தேவபாண்டலம் முனியன் மகன் ரமேஷ் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று சங்கராபுரம் பொய்குனம் ரோடில் நின்றுகொண்டிருந்த அப்துல் நபி மகன் ேஷக் அகமது, 45, என்பவரை சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலமுரளி, சப் இன்ஸ்பெக்டர்கள் பிரதாப்குமார், ஏழுமலை ஆகியோர் கைது செய்தனர். அவரை சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.
