/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்
/
விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஆக 26, 2024 05:17 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஹிந்து முன்னணியின் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அருண் முன்னிலை வகித்தார். பொருளாளர் மணிகண்டன் வரவேற்றார். ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் மகாதேவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவில் வைக்கப்படும் சிலைகளுக்கும் தனித்தனியாக 3 பொறுப்பாளர்களை நியமித்து முழுமையான வழிபாடுகள், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை நிர்வகிக்க வேண்டும். முதல் நாள் விழாவை ஹிந்து எழுச்சி நாளாகவும், இரண்டாம் நாள் ஹிந்து இளைஞர் எழுச்சி நாளாகவும், மூன்றாம் நாள் சமுதாய நல்லிணக்க நாளாக ஒருங்கிணைத்து விஜர்சன ஊர்வலம் நடத்த வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாவட்டம் முழுதும் விநாயகர் சிலைகளை கரைக்கும் நீர் நிலைகளில் மின் விளக்குகள், கிரேன் உள்ளிட்ட வசதிகளை அரசு சார்பில் ஏற்படுத்தி தர வேண்டும். அங்கு பூஜைகள் முழுமையாக நடத்திட அனுமதிக்க வேண்டும். சிலைகள் உள்ள பகுதிகளில் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
கூட்டத்தில், நகர துணை தலைவர்கள் செந்தில், அருண்குமார், நகர செயலாளர்கள் சதீஷ், வெங்டேசன், சுப்ரமணி, பிரகாஷ் உட்பட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.