/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விநாயகர் சதுர்த்தி விழா; ஆலோசனை கூட்டம்
/
விநாயகர் சதுர்த்தி விழா; ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 30, 2024 12:21 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர்கள் சங்கராபுரம் சத்தியசீலன், வடபொன்பரப்பி ஏழுமலை, முங்கில்துறைபட்டு சிவன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கராபுரம், வடபொன்பரப்பி, முங்கில்துறைப்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 50 க்கும் மேற்பட்ட கிராம முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் பேசுகையில், சிலைகள் குறிப்பிட்ட உயரத்திற்குள் வைக்க வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும். சிலைகள் வைக்க போலீசில் அனுமதி பெற வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியான முறையில் நடந்திட பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும். அரசு நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்' என்றார்.