/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கனியாமூர் சக்தி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
/
கனியாமூர் சக்தி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
ADDED : மே 11, 2024 04:49 AM

கள்ளக்குறிச்சி: கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், பிளஸ்-1 வகுப்பில் சேர கல்வி மற்றும் பஸ் கட்டண சலுகை வழங்கப்படுவதாக தாளாளர் தெரிவித்துள்ளார்.
இப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி பவித்ரா 494, மாணவர் வெற்றிவேல் 493, மாணவி விஜயலட்சுமி 489 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிறுவனர் பார்வதியம்மாள், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் பிரகாஷ் ஆகியோர் கவுரவித்தனர்.
தொடர்ந்து, பள்ளி தாளாளர் கூறுகையில், 'ஆசிரியர்களின் கடுமையான உழைப்பினால் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர். கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக பிளஸ்-1 வகுப்பில் சேர, மதிப்பெண் அடிப்படையில் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
அதன்படி, 490க்கு மேல் பெற்றவர்களுக்கு கல்வி மற்றும் பஸ் கட்டணம் முற்றிலும் இலவசம். 481 முல் 489 மதிப்பெண் பெற்றவர்களுக்கு கல்விக் கட்டணம் இலவசம். பஸ் கட்டணத்தில் 75 சதவீத சலுகையும், 471 முதல் 480 மதிப்பெண் பெற்றவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் 85 சதவீதமும், பஸ் கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படும்.
மேலும், 461 முதல் 470 மதிப்பெண் பெற்றவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் 80 சதவீதமும், பஸ் கட்டணத்தில் 25 சதவீதமும், 451 முதல் 460 மதிப்பெண் பெற்றிருந்தால் கல்வி கட்டணத்தில் 70 சதவீதம், 426 முதல் 450 மதிப்பெண் பெற்றிருந்தால் கல்விக் கட்டணத்தில் 60 சதவீதம், 401 முதல் 425 மதிப்பெண் பெற்றிருந்தால் கல்வி கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படுகிறது' என்றார்.