/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுமி மாயம்: போலீசில் புகார்
/
சிறுமி மாயம்: போலீசில் புகார்
ADDED : ஜூலை 29, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே மாயமான சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த பழங்கூரை சேர்ந்த அய்யாதுரை மகள் அணு,17; இவர் கடந்த 26 ம் தேதி இரவு வீட்டில் துாங்கியுள்ளார். அடுத்த நாள் காலை எழுந்து பார்த்தபோது சிறுமியை காணவில்லை.
அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.