/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண் குழந்தைகள் முதிர்வு தொகை; விண்ணப்பங்கள் வரவேற்பு
/
பெண் குழந்தைகள் முதிர்வு தொகை; விண்ணப்பங்கள் வரவேற்பு
பெண் குழந்தைகள் முதிர்வு தொகை; விண்ணப்பங்கள் வரவேற்பு
பெண் குழந்தைகள் முதிர்வு தொகை; விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூலை 30, 2024 11:24 PM
கள்ளக்குறிச்சி : பெண் குழந்தைகளுக்கான 18 வயது முதிர்வு தொகை பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18 வயது முடிவடைந்த பயனாளிகள் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதற்காக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட வைப்புத் தொகைக்கான ரசீது, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பயனாளியின் வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பயனாளியின் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களை சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர்களிடம் சமர்ப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.