/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு ஊர்வலம்
/
உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜூலை 06, 2024 05:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் பிரபு தலைமை தாங்கி, விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஆசிரியர்கள் குமார், சத்தியா, ஏழுமலை, சுரேஷ், இளையராஜா, பாலமுருகன் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச் சூழல் குறித்த ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச் சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் சின்னதம்பி மரக்கன்றுகள் வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.