/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் அரசு பஸ்கள் சங்கராபுரம் நகர மக்கள் கடும் அவதி
/
நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் அரசு பஸ்கள் சங்கராபுரம் நகர மக்கள் கடும் அவதி
நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் அரசு பஸ்கள் சங்கராபுரம் நகர மக்கள் கடும் அவதி
நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் அரசு பஸ்கள் சங்கராபுரம் நகர மக்கள் கடும் அவதி
ADDED : பிப் 28, 2025 05:15 AM
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் அரசு பஸ்கள், பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்தால் பொது மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
சங்கராபரத்தில் அரசு பஸ் பணி மனை உள்ளது. இதன் மூலம் பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சங்கராபுரம் நகரின் மையப் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியில் 80க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.
இவர்களில் பாதிக்கு மேல் வெளியூர்களில் இருந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியிலிருந்து சங்கராபுரம் வரும் பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் அரசு மேல்நிலைப் பள்ளி பஸ் நிறுத்தத்தில் நிற்பதில்லை.
ஆனால், தனியார் பஸ்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றனர். அரசு பஸ் டிரைவர்கள் அலட்சியத்துடன் செயல்படுகின்றனர்.
ஏற்கனவே போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதில் பஸ்சுக்கு நிற்கும் நபர்களைக் கூட ஏற்றிச் செல்லாமல் பெரும்பாலான பஸ்கள் காலியாகவே செல்கின்றன.
மேலும், சங்கராபுரம் பஸ் நிலையத்தில் காலை பீக் ஹவர்சில் அரசு பஸ்கள் குறித்த நேரத்திற்குகு வருவதில்லை.
அரசு பஸ்கள் பஸ் நிலையத்திற்கு தாமதமாக வருவதால் தனியார் பஸ்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் செல்கிறது. பின்னால், அரசு பஸ்கள் காலியாகவே செல்கின்றன.
சங்கராபுரம் பஸ் நிலையத்தில் நேர காப்பாளர் அலுவலகம் உள்ளது. காலை நேரங்களில் ஆபீஸ் மட்டுமே திறந்துள்ளது. முழு நேரம் பணியில் யாரும் இருப்பதில்லை.
அரசு பஸ்கள் குறித்த நேரத்தில் காலதாமதமின்றி செல்லவும், நேரக்காப்பாளர் அலுவலகத்தில் பணியில் உள்ளவர்கள் அரசு பஸ்கைளை குறித்த நேரத்தில் அனுப்பவும், சங்கராபுரம் நகரில் உள்ள அனைத்து பஸ் நிறுத்தத்திலும் நின்று செல்ல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதுடன், அலட்சியமாக செயல்படும் டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.