/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மரத்தின் மீது அரசு பஸ் மோதல்: 9 பேர் காயம்
/
மரத்தின் மீது அரசு பஸ் மோதல்: 9 பேர் காயம்
ADDED : ஜூலை 02, 2024 11:15 PM

கள்ளக்குறிச்சி : வாணாபுரம் அருகே சாலையோர மரத்தின் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.
திருக்கோவிலுார், சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் சையத் பாபு,51; அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று மதியம் 12:00 மணியளவில், அரசு பஸ்சில் திருக்கோவிலுாரில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சங்கராபுரத்திற்கு புறப்பட்டார்.
வாணாபுரம் அடுத்த மரூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, எதிர் திசையில் 'எம்-சாண்ட்' லோடுடன் வந்த லாரி, அரசு பஸ் மீது உரசியது. இதனால், பஸ்சை இடது பக்கமாக திருப்பிய போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பஸ்சில் பயணித்த ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமு மனைவி வள்ளி, 52; கடம்பூர் தேவராஜ் மனைவி ஜெயக்கொடி, 47; மெய்யூர் ராஜ்குமார், 19; விமலா,31; உட்பட 9 பேர் காயமடைந்தனர்.
இதில், ஜெயக்கொடி, வள்ளி ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும் மற்றவர்கள் வாணாபுரம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் தத்தனுார் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி, 36; மீது வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.