/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாரதி மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
பாரதி மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : மார் 25, 2024 05:53 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 17வது பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவிற்கு கல்லுாரி தாளாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமி கந்தசாமி, ஆக்சாலீஸ் இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் பரத்குமார், செயலாளர் சாந்திபரத்குமார் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சுபா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பிரகாஷ், 1,034 மாணவிகளுக்கு பட்டம் வழங்கி, பேசினார்.
விழாவில், பல்கலைக்கழக அளவில் 5 மாணவிகள் முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கமும், 18 மாணவிகள் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவிகள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

