
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்,; சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசிமாத மயானக் கொள்ளை திருவிழா நடந்தது.
இதையொட்டி நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்டவைகளால், சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. பின், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் ஊர்வலமாக சென்று மயானத்தை அடைந்தது. அங்கு, பலி பீடத்தில் ஆடு, கோழி பலியிடப்பட்டன.
அங்கு பக்தர்கள் சில்லறை, காய்கறி மற்றும் தானிய வகைகளை சூறையிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தொடர்ந்து நடந்த ஊர்வலத்தில் காளி, அம்மன் வேடங்கள் அணிந்து பலர் ஆக்ரோஷமாக ஆடி வந்தனர். ஊர்வலம் கோவிலில் நிறைவு பெற்றது.
சங்கராபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.