/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குறைகேட்பு கூட்டம் 347 மனுக்கள் குவிந்தன
/
குறைகேட்பு கூட்டம் 347 மனுக்கள் குவிந்தன
ADDED : செப் 10, 2024 12:11 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 347 மனுக்கள் பெறப்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் முன்னிலையில், மாவட்டத்தின் அனைத்து அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளார்ச்சித்துறை உட்பட பல்வேறு துறைசார்ந்த கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
அதன்படி பொதுமக்களிடமிருந்த 347 மனுக்களை பெறப்பட்டது. மனுக்கள் தொடர்புடைய துறை அலுவலர்களிடம் மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.