/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரம் பகுதியில் குட்கா விற்பனை ஜோர்
/
சங்கராபுரம் பகுதியில் குட்கா விற்பனை ஜோர்
ADDED : ஏப் 30, 2024 11:19 PM
சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் குட்கா விற்பனை மீண்டும் சூடுபிடித்துள்ளது.
சங்கராபுரம் மற்றும் சுற்றியுள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்குள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுகிறது. வெளியூரில் இருந்து ஒரு பாக்கெட் 15 ருபாய்க்கு வாங்கி வந்து 40 முதல் 50 ருபாய் வரை விற்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் இந்த போதைப் பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக போலீசார் தொடர் சோதனை காரணமாக கடைகளில் விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது. கடந்த இரு மாதங்களாக போலீசார் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததால் கடைகளில் சோதனை செய்ய முடியவில்லை.
இதை கடைக்காரர்கள் சாதகமாக பயன்படுத்தி விற்பனையை மீண்டும் துவக்கியுள்ளனர். தொடர்ந்து குட்கா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சங்கராபுரம் பகுதியில் குட்கா விற்பனையை முற்றிலும் தடை செய்ய எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.