ADDED : ஜூன் 08, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு உணவுப் பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் மதன்மோகன் மற்றும் போலீசார் கடந்த 18ம் தேதி ஏரிக்கரையில் உள்ள செல்வம், 63; என்பவரின் பங்க் கடையை சோதனை செய்தனர். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
உடன், செல்வம் மீது வழக்குப் பதிந்தனர். தொடர்ந்து உணவுப் பொருள் பாதுகாப்புத்துறை அலுவலர் சண்முகம் மற்றும் போலீசார் கடையை பூட்டி சீல் வைத்தனர்.