/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத் திறனாளிகள் பஸ் பாஸ்; ஜூன் 30 வரை பயன்படுத்த அனுமதி
/
மாற்றுத் திறனாளிகள் பஸ் பாஸ்; ஜூன் 30 வரை பயன்படுத்த அனுமதி
மாற்றுத் திறனாளிகள் பஸ் பாஸ்; ஜூன் 30 வரை பயன்படுத்த அனுமதி
மாற்றுத் திறனாளிகள் பஸ் பாஸ்; ஜூன் 30 வரை பயன்படுத்த அனுமதி
ADDED : மார் 22, 2024 10:22 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பஸ் பயண சலுகை அட்டையை வரும் ஜூன் 30 வரை புதுப்பிக்காமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுகுறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் வரும் ஏப்ரல் 19ம் தேதி தேர்தலும், ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால், புதிய திட்டங்கள் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசு சலுகைகள் வழங்குவது ஜூன் 30 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல் 1 முதல் புதுப்பிக்க வேண்டிய பயண சலுகை அட்டைகள், வரும் ஜூன் 30ம் தேதி வரை செல்லத்தக்கதாக ஆணை பெறப்பட்டுள்ளது.
எனவே, பஸ் பயண சலுகை அட்டை பெற்று பயன்படுத்தி வரும் மாற்றுத் திறனாளிகள், மார்ச் 31 முடியும் வகையில் உள்ள பயண சலுகை அட்டைகளை புதுப்பிக்காமல் வரும் ஜூன் 30ம் தேதிவரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.