தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோடை விழாவால்... மகிழ்ச்சி :கல்வராயன்மலையில் வரும் 31 மற்றும் 1ம் தேதி ஏற்பாடு

6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோடை விழாவால்... மகிழ்ச்சி :கல்வராயன்மலையில் வரும் 31 மற்றும் 1ம் தேதி ஏற்பாடு

6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோடை விழாவால்... மகிழ்ச்சி :கல்வராயன்மலையில் வரும் 31 மற்றும் 1ம் தேதி ஏற்பாடு


UPDATED : ஜூலை 18, 2026 04:56 AM

ADDED : ஜூலை 17, 2026 05:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 18, 2026 04:56 AM ADDED : ஜூலை 17, 2026 05:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தின் முக்கிய நிகழ்வான கோடை விழா, கடந்த 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடக்கவுள்ளதால் மலைவாழ் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரியாலுாரில் வரும் 31 மற்றும் 1ம் தேதி கோடை விழா நடத்தப்படும் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட மேற்கு எல்லையில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் கல்வராயன்மலை அமைந்துள்ளது. கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 15 ஊராட்சிகளில் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மலைவாழ் மக்கள் விவசாயம் மட்டுமின்றி கால்வடை வளர்ப்பு, தேன் எடுத்தல், கடுக்காய் சேகரித்தல் ஆகிய தொழில்களையும் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

மலைப் பகுதியில் மேகம், பெரியார், கவியம் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகள், படகுசவாரி, பூங்கா ஆகியவை இருப்பதால் சுற்றுலா தலமாகவும் உள்ளது. மலைக்கு மெருகூட்டும் வகையில் மலை அடிவாரத்தில் கோமுகி அணை அமைந்துள்ளது.

தமிழக அரசு சார்பில் கல்வராயன்மலையில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதத்தில் 2 நாட்கள் வெகுவிமர்சையாக கோடை விழா நடத்துவது வழக்கம். விழாவில் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். மேலும் கோடை விழாவில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அரசு துறைகளின் பல்துறை கண்காட்சி அரங்குகள் அமைத்து திட்டங்கள் மூலம் பயன்பெறுவது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

விழாவிற்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் அதிகளவிலான வருகையால் மலை பகுதியிலுள்ள நீர் வீழ்ச்சி, பூங்கா, படகு சவாரி உள்ளிட்ட சுற்றலா தலங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டது. விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது, முக்கிய நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா இருந்தது. வனத்துறை, சுற்றுலாத் துறை அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் உட்பட அனைத்து துறை அரசு அதிகாரிகள் விழாவில் பங்கேற்பர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் உதயமானது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டு கோடை விழா நடத்தப்படவில்லை. அதன்பின் தி.மு.க., ஆட்சியில் கோடை விழா நடத்தப்படுமா என்று பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் கோடை விழாவை நடத்த தி.மு.க., அரசு முன்வரவில்லை. மாவட்டத்தின் முக்கிய நிகழ்வாக இருந்த கோடை விழா கைவிடப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது புதியதாக பொறுப்பேற்ற த.வெ.க., ஆட்சியிலாவது கோடை விழா நடத்த முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கல்வராயன்மலையில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, கொரோனா காலத்தில் இருந்து நடைபெறதா கோடை விழாவை மீண்டும் நடத்திட வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து அமைச்சர் வன்னிஅரசு, கோரிக்கையை பரிசீலனை செய்து அவரது அறிவுரையின் படி கரியாலுாில் வரும் 31 மற்றும் ஆக., 1ம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்படும் என்று கலெக்டர் பத்மஜா அறிவித்துள்ளார். மேலும், கோடை விழாவில் பல்வேறு துறைகளின் கண்காட்சி அரங்குகள், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் முக்கிய நிகழ்வான கோடை விழா கடந்த 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடத்தப்பட உள்ளது பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுட்டி காட்டிய தினமலர்

மாவட்டத்தின் முக்கிய நிகழ்வான கோடை விழா கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்படாமல் போனதால் சுற்றுலா மேம்பாட்டு வளர்ச்சிக்கு தடை ஏற்பட்டது குறித்தும், மலைவாழ் மக்களுக்கு ஆண்டுதோறும் கிடைத்து வந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் போனது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டு தொடர்ந்து சுட்டி காட்டப்பட்டது. இதனையடுத்து தற்போது கோடை விழா நடத்தப்படவுள்ளது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us