ADDED : ஜூன் 24, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை அருகே மனஉளைச்சலில் விஷம் குடித்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மணலுார்பேட்டை அடுத்த மேலந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா மகன் நவீன் குமார், 32; திருமணமாகவில்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வயலுக்கு சென்றபோது தவறி விழுந்ததில், உடல் உபாதை ஏற்பட்டது.
இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த நவீன் குமார் நேற்று அதிகாலை வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.
உடன், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.
புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.