/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் உயர் மின் திறன் டிரான்ஸ்பார்மர்
/
தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் உயர் மின் திறன் டிரான்ஸ்பார்மர்
தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் உயர் மின் திறன் டிரான்ஸ்பார்மர்
தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் உயர் மின் திறன் டிரான்ஸ்பார்மர்
ADDED : ஜூலை 14, 2024 05:24 AM

தியாகதுருகம் : தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் உயர் மின்திறன் டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டு, மின் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது.
தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் மின் நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக குறைந்த அழுத்த மின்சாரம் மற்றும் அவ்வப்போது மின் தடை ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து 16 எம்.வி.ஏ., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மரை மாற்றிவிட்டு 25 எம்.வி.ஏ., உயர்திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணி கடந்த 4ம் தேதி துவங்கியது.
அதனைத் தொடர்ந்து, கடந்த 12ம் தேததி புதிய டிரான்ஸ்பார்மரை மின் விநியோகத்திற்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பூஜைகளை செய்த பின் திருவண்ணாமலை மண்டல பொறியாளர் பழனிராஜூ தலைமையில், கள்ளக்குறிச்சி மேற்பார்வையாளர் பொறியாளர் மயில்வாகனன் முன்னிலையில், டிரான்ஸ்பார்மர் துவக்கி வைக்கப்பட்டது. இதனால் தியாகதுருகம் சுற்றுவட்டர பகுதி மின் தடை பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. செயற்பொறியாளர்கள் சாமிநாதன், சுப்புராஜ், தினகர், கவிதா, உதவி செயற்பொறியாளர்கள் கோபி, ஜான்போஸ்கோ, கேசவேல், உதவி மின் பொறியாளர்கள் வெங்கடேசன், பிரசாத், வேதகுரு, பெரியசாமி உட்பட மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்றனர்.