/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் நாளை உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
/
கள்ளக்குறிச்சியில் நாளை உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சியில் நாளை உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சியில் நாளை உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : மே 12, 2024 06:00 AM
கள்ளக்குறிச்சி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'கல்லுாரி கனவு' என்ற உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கலையரங்கத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நாளை 13ம் தேதி நடைபெறும் இந்நிகழ்ச்சி காலை 9:30 மணி முதல் மாலை 3:30 மணி வரை நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லுாரிகள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் தங்களது கல்லுாரிகளில் மாணவ, மாணவியர்கள் மேற்படிப்பை, விருப்பமுள்ள பாடங்களை தேர்ந்தெடுத்து பயில்வதற்கான வழிகாட்டல் அரங்குகள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளன.
பொறியியல், மருத்துவம் மற்றும் ஐ.ஐ.டி., உள்ளிட்டவற்றில் சேர்ந்து பயில்வதற்கான வழிகாட்டிநெறிமுறைகள், விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது. அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வினை எதிர்கொள்வது குறித்தும், போட்டி தேர்வின்முக்கியத்துவம் குறித்தும் அரசுத் துறை சார்பில் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் உரையாற்ற உள்ளனர்.
மேலும், 'நான் முதல்வன்' திட்டத்தில் பயன்பெற்ற மாணவ மாணவிகள், இத்திட்டத்தின் வழிமுறைகள் குறித்தும், இத்திட்டத்தின் பயன்கள் குறித்தும் உரையாற்ற உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து இடத்திலிருந்தும் பஸ் வசதியும், மதிய உணவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.