/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வன அலுவலர் இல்லாததால் மலை வாழ் மக்கள் அவதி
/
வன அலுவலர் இல்லாததால் மலை வாழ் மக்கள் அவதி
ADDED : மார் 07, 2025 07:05 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வனத்துறை அலுவலர் இல்லாததால் மலைகிராம மக்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை உள்ளிட்ட பெரும்பாலான வனப்பகுதிகள் நிரம்பிய பகுதி. இங்கு கடந்த, 2017, ல் மாவட்ட வன அலுவலர் புதிதாக நியமிக்கப்பட்டார்.
இதனால், மலைவாழ் மக்கள் வனத்துறை அலுவல் பணிகளுக்காக வெகு துாரம் பயணிக்கும் நிலை மாறியது. அப்பகுதி மக்கள் சாலை வசதி, பட்டா பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்திலி வனத்துறை அலுவலகத்தில், மாவட்ட அலுவலரிடம் மனுக்களாக அளித்தனர்.
இந்நிலையில் திடீரென கடந்த,2018 ல், மாவட்ட வன அலுவலர் பணியிடம் காலியானது.
இதனால் வனத்துறை சார்ந்த அனைத்து பணிகளுக்கும் மீண்டும், 100,க்கும் மேற்பட்ட கி.மீ., தொலைவில் உள்ள விழுப்பரத்திற்கே மக்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த, 2019, ல் கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் பிரிக்கப்பட்டு, கலெக்டர், எஸ்.பி., உட்பட அனைத்து மாவட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான வன அலுவலர் பணியிடம் நிரப்பப்படவில்லை. இதனால் மலை கிராம மக்கள் மட்டுமின்றி, 100,க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்களும், கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.