/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன்விரோத தகராறு: 4 பேர் மீது வழக்கு
/
முன்விரோத தகராறு: 4 பேர் மீது வழக்கு
ADDED : மே 11, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: புக்கிரவாரி பஸ் நிறுத்தம் அருகே முன்விரோத தகராறில், இரு தரப்பைச் சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் நாச்சன் மகன் கோமதுரை, 27; வரதப்பனுாரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சுரேந்திரன். இருவருக்குமிடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் உள்ளது. கடந்த 6ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
இரு தரப்பு புகாரின் பேரில், சுரேந்திரன், ராமலிங்கம், விக்னேஷ், கோமதுரை ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.