நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : மணலுார்பேட்டை அருகே வீட்டு மனை தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
தேவடியார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் மனைவி செல்லக்கண்ணு, 30; அதே பகுதியைச் சேர்ந்தவர் மண்ணு, 56; இவர்களுக்குள் வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
நேற்று முன்தினம் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
இரு தரப்பு புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.