/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்தது எப்படி?
/
கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்தது எப்படி?
கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்தது எப்படி?
கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்தது எப்படி?
ADDED : ஜூன் 20, 2024 03:51 AM
கல்வராயன்மலையின் பல்வேறு இடங்களில் காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சி மட்டுமின்றி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கும் கடத்தி சென்று விற்கப்படுகிறது. எந்தந்த இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது, எந்தந்த வழிகளில் கடத்தப்படுகிறது என்பது போலீசாருக்கு தெள்ளத் தெளிவாக தெரியும்.
கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சுவதை தடுப்பதற்கு, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவினர், கச்சிராயபாளையம் மற்றும் கரியலுார் சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் வனத்துறையினர் பெயரளவுக்கு ரோந்து செல்கின்றனர்.
அப்போது, 1000 லிட்டர், 2000 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாக கூறி போட்டோவுக்கு போஸ் கொடுத்து ரெக்கார்டு தயார் செய்து கொள்கின்றனர். ஆனால், பறிமுதல் செய்யப்படாத கள்ளச்சாராயம் 10 ஆயிரம் லிட்டர், 20 ஆயிரம் லிட்டர் என ஆறாக ஓடிக் கொண்டுள்ளது.
ஒரு சில போலீஸ் அதிகாரிகள், சாராயம் காய்ச்சுபவர்களுடன் ரகசிய தொடர்பில் இருப்பதால், கண் துடைப்பிற்காகவே அவ்வப்போது சாராய ஊறல் கண்டுபிடித்து அழிக்கப்படுகிறது.
இதனால், கள்ளச்சாராயம் விற்பது தொடர்கிறது; அப்பாவிகளின் உயிர் பலிகளும் தொடர்கிறது.